சூர்யா 39 குறித்து வெளிவந்த மாஸ் அப்டேட்!

தமிழ் திரையுலகில் மிக சிறந்த நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் தற்போது சுதா கே பிரசாத் அவர்கள் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் சூரரை போற்று.

Mar 2, 2020 - 14:34
 0
சூர்யா 39 குறித்து வெளிவந்த மாஸ் அப்டேட்!
அருவா

தமிழ் திரையுலகில் மிக சிறந்த நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் தற்போது சுதா கே பிரசாத் அவர்கள் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் சூரரை போற்று.

இப்படத்திற்கு பிறகு சூர்யா ஹரி இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் கசிந்து வந்தது. இந்நிலையில் தற்போது இதனை உறுதி செய்யும் வகையில் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

ஆம் சூர்யாவின் 39ஆம் படத்தை ஹரி தான் இயக்க போகிறார். இப்படத்திற்கு 'அருவா' என தலைப்பு வைத்து செம மாஸாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க உள்ளார் என்பதுதான் தற்போதைய அதிகாரப்பூர்வ தகவல்.

இந்த படம் சூர்யாவிற்கு இயக்குனர் ஹரி அவர்களுக்கு 6ஆம் முறையாக இணையும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor