நட்பே துணை திரைவிமர்சனம்

ஹிப்ஹாப் ஆதி ஒரு பாடகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பிறகு சில படங்களுக்கு இசையமைத்து மீசைய முறுக்கு படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அப்படம் அவருக்கு மிகப்பெரும் வரவேற்பை பெற்று தர தற்போது நட்பே துணையும் அப்படி ஒரு வரவேற்பை தந்ததா? பார்ப்போம்.

நட்பே துணை திரைவிமர்சனம்
நட்பே துணை திரைவிமர்சனம்

ஹிப்ஹாப் ஆதி ஒரு பாடகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பிறகு சில படங்களுக்கு இசையமைத்து மீசைய முறுக்கு படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அப்படம் அவருக்கு மிகப்பெரும் வரவேற்பை பெற்று தர தற்போது நட்பே துணையும் அப்படி ஒரு வரவேற்பை தந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

உலக நாடுகளே வேண்டாம் என்று ஒதுக்கிய ஒரு மருந்து கம்பெனியை இந்தியாவில் தொடங்க அரசியல்வாதி கரு.பழனியப்பன் பெர்மிஷன் கொடுக்கின்றார். அந்த கம்பெனி காரைக்காலில் உள்ள ஒரு ஹாக்கி கிரவுண்டில் வருகிறது.

அந்த கிரவுண்டில் விளையாடும் ஹாக்கி அணி எத்தனை போராடியும் அந்த கிரவுண்ட்டை மீட்டெடுக்க முடியாத நிலையில் தேசிய அளவில் அந்த அணி கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

அப்போது அந்த அணி தங்கள் திறமையை காட்டியே ஆகவேண்டும், கிரவுண்ட் தங்கள் கைக்கு வரவேண்டும் என்று களத்தில் இறங்குகின்றனர். அதன் பிறகு நடக்கும் அதகளமே இந்த நட்பே துணை.

படத்தை பற்றிய அலசல்

ஹிப்ஹாப் ஆதி தனக்கு என்ன வருமோ அதை சரியாக தெரிந்து அசத்துகிறார். ஆட்டம், பாட்டம், எமோஷ்னல் ஏன் இதில் இடைவேளை காட்சியில் செம்ம மாஸ் கூட காட்டியுள்ளார்.

கரு.பழனியப்பன் அட அப்படியே கண்முன் ஒரு அரசியல்வாதியை கொண்டு வந்துள்ளார். தவறாக ஒரு கருத்தை சொல்லிவிட்டு அதை மாற்றவது, ஐடி விங்ஸை தன்னை பற்றி புகழ்ந்து மீம் போட சொல்வது என அசத்துகிறார்.

எருமசாணி விஜய், ஷாரா என பல யூடியூப் பிரபலங்களும் வந்து செல்கின்றனர். அதிலும் கிடைக்கின்ற கேப்பில் ஸ்கோர் செய்கின்றனர்.

ஸ்போர்ட்ஸ் என்றாலே தமிழ் சினிமாவில் சொல்லி அடிக்கும் களம், அதிலும் இந்தியா ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த ஹாக்கியை கையில் எடுத்து மிரட்டியுள்ளனர். அதிலும் கடைசி 40 நிமிஷம் நாமே கிரவுண்டிற்குள் போன பீலிங்.

அதற்கு செம்ம பக்க பலமாக உள்ளது ஒளிப்பதிவு, ஹிப்ஹாப் ஆதியின் பின்னணி இசையும் கூஸ்பம்ஸ் மெட்டீரியல் தான். ஆனால், பாடல்களில் இந்த முறை கொஞ்சம் சறுக்கிவிட்டார்.

இளைஞர்களின் பல்ஸ் தெரிந்த ஆதி, விளையாட்டு, அரசியல், கிரிக்கெட் வளர்ச்சியால் மற்ற கேம் கண்டுக்காமல் போனது என பலவற்றை இன்றைய ட்ரெண்டில் கூறியுள்ளார்.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம், அழிந்து வரும் ஹாக்கி கேமை கொண்டு வந்ததற்கே பாராட்டுக்கள்.

இடைவேளை காட்சி, கிளைமேக்ஸ் காட்சி சரவெடி.

பல்ப்ஸ்

நேஷ்னல் ப்ளேயர் கூட தெரியாத ஹாக்கி ப்ளேயர் என கொஞ்சம் லாஜிக் மீறல்.

காதல் காட்சிகள் அழுத்தம் இல்லாமல் இருப்பது.

மொத்தத்தில் நண்பர்கள் கொண்டாடும் அத'களமான' ஹாக்கி கேம் தான் இந்த நட்பே துணை.