தளபதி 63 படத்தில் நயன்தாராவுக்கு இப்படியொரு பேரா?

நயன்தாராவுக்கு இப்படத்தில் ஏஞ்சல் என பெயர் வைத்துள்ளார்களாம். அவருக்கேத்த தலைப்புதான் என ரசிகர்கள் சிலாகித்து வருகிறார்கள்.

Jun 21, 2019 - 13:03
 0
தளபதி 63 படத்தில் நயன்தாராவுக்கு இப்படியொரு பேரா?
தளபதி 63

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இப்படத்தில் விஜய்யின் பெயர் மைக்கல் என்பது நமக்கு தெரியும். ஆனால் நயன்தாராவின் பெயர் என்ன தெரியுமா? நயன்தாராவுக்கு இப்படத்தில் ஏஞ்சல் என பெயர் வைத்துள்ளார்களாம். அவருக்கேத்த தலைப்புதான் என ரசிகர்கள் சிலாகித்து வருகிறார்கள்.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor