விஜய் சேதுபதியுடன் நிவேதா!

நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமாகி சில படங்களில் நடித்தார். மதுரைக்கார பெண்ணான இவர் துபாயில் வளர்ந்தவர்,

விஜய் சேதுபதியுடன் நிவேதா!
நிவேதா பெத்துராஜ்

நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமாகி சில படங்களில் நடித்தார். மதுரைக்கார பெண்ணான இவர் துபாயில் வளர்ந்தவர்,

இவர் நடித்த எந்த படமும் ஒழுங்காக ஓடவில்லை. மேலும் தெலுங்கிலும் அறிமுகமாகி அந்த மெண்டல் மதிலோ படமும் நல்ல விமர்சனங்கள் பெற்றும் பிளாப் ஆனது. ஆனால் சென்ற ஆண்டு வெளியான டிக் டிக் டிக் படம் அவரை ஹிட் ஹீரோயின் ஆக்கியது. இதனை அடுத்த திமிரு புடிச்சவன் படத்தில் கவர்ச்சி போலீசாக நடித்தார்.

தற்பொழுது அவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வாலு, ஸ்கெட்ச் புகழ் விஜய் சந்தர் இயக்க உள்ள படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் ராஷி கண்ணா முதல் நாயகி ஆவார்.