விஜய்யின் 64வது படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!
தளபதி விஜய் நடித்துள்ள அவரது 63வது படம் பிகில். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கிறது.

தளபதி விஜய் நடித்துள்ள அவரது 63வது படம் பிகில். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கிறது.
அண்மையில் நடத்தப்பட்ட ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக இருந்தது. வரும் தீபாவளிக்கு படம் வெளியாக இருக்கிறது.
இப்படத்திற்கு பிறகு விஜய் மாநகரம் பட புகழ் லோகேஷ் இயக்கத்தில் தான் தன்னுடைய 64வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ ஒரு நிகழ்ச்சியில் இப்படம் குறித்து பேசியுள்ளார்.
விஜய்யின் 64வது படம் பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமையும். பெரிய பட்ஜெட்டில் உலகத்தில் தரமான படமாக இருக்கும்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு அக்டோபர் இரண்டாம் வாரத்தில் இருந்து தொடங்கும் எனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
#Thalapathy64 will be a BIG BLOCKBUSTER