ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தை சொன்ன ராய் லட்சுமி!
நடிகை ராய் லட்சுமி ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தையாக சொல்லியுள்ளார்.

நடிகை ராய் லட்சுமி ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தையாக சொல்லியுள்ளார்.
கற்க கசடற படம் மூலம் கோலிவுட் வந்தவர் லட்சுமி ராய். சில படங்களில் நடித்த பிறகு ராசி கருதி தனது பெயரை ராய் லட்சுமி என்று மாற்றிக் கொண்டார். பாலிவுட் பக்கம் போனவர் பயங்கரமாக கவர்ச்சி காட்டி இந்தி நடிகைகளையே மிரள வைத்தார்.
பாவம், அவர் நேரம் அவர் பெரும் எதிர்பார்ப்புடன் நடித்த ஜூலி 2 இந்தி படம் ஓடவில்லை. நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அவரால் இன்னும் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற முடியவில்லை.
இருப்பினும் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் தமிழ் தவிர்த்து இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்துள்ள கன்னட படமான ஜான்ஸியின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
ராய் லட்சுமி முன்னணி நடிகையாக இல்லாவிட்டாலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் அவரை ஏராளமானோர் பின்தொடர்கிறார்கள். ராய் லட்சுமி ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவ். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன் தனது புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தனது புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு உங்களை தேர்வு செய்யும் நபர்களை நீங்கள் தேர்வு செய்க என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
ஆமா, இந்த ராய் லட்சுமி அறிவுரை வழங்கியது பெரிய விஷயமா என்று கேட்கலாம். அவர் ட்விட்டர் பக்கத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. அதாவது அவர் என்ன தான் தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டாலும் நெட்டிசன்கள் அவரை கலாய்ப்பது இல்லை. மாறாக வாவ், அழகி, பேரழகி என்று பாராட்டத் தான் செய்கிறார்கள்.
பிற நடிகைகள் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டால் நெட்டிசன்கள் கேவலமாக கமெண்ட் போடுகிறார்கள். ஆனால் ராய் லட்சுமியை மட்டும் அப்படி கலாய்த்து கேவலப்படுத்துவது இல்லை. என்ன மாயமோ, அவரை மட்டும் போட்டி போட்டுக் கொண்டு பாராட்டுகிறார்கள்.