தமிழ் சினிமாவையும் காதல் காவியங்களையும் என்றுமே பிரிக்க முடியாது. அந்த வகையில் கல்லூரி காதல், ஒரு தலைக்காதல், பார்த்து வரும் காதல், பார்க்காமலேயே வரும் காதல் என பல பரிமாணங்களை தமிழ் சினிமா காட்டியுள்ளது.அதே பாணியில் நான் என்ற வித்தியாசமான படத்திற்கு பிறகு ஜீவா சங்கர் இயக்கத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா நடித்திருக்கும் படம் தான் அமரகாவியம்.

இதுவரை நாம் பார்த்த பல அழுத்தமான காதல் கதைகளான 7ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன், மைனா போன்ற படங்களின் வரிசையில் இந்த படமும் இடம்பெறும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்து இல்லை.

இதை முன்நிறுத்தி ஜீவா கையில் எடுத்திருக்கும் காதல், பள்ளி பருவத்தில் வரும் முதல் காதலை தான். ஆனால் கதை ஆரம்பிக்கும் விதமே நம்மை ஈர்த்து அவர்களிடம் கொண்டு செல்கிறது.

தன் நண்பரின் காதலை சொல்ல பயந்து கொண்டே மியா ஜார்ஜிடம் வர, அவர் நான் உன் நணபனை காதலிக்கவில்லை, உன்னை தான் காதலிக்கிறேன் என்று செல்வராகவன் பட கதாநாயகி போல் டெம்ப் ஏற்றுகிறார்.

பின் வழக்கம் போல் காதல், பாடல் என கதை நகர, திடிரென்று ஏற்படும் திருப்பம் அதை தொடர்ந்து இவர்கள் வாழ்க்கை என்ன ஆகிறது என்பது தான் மீதிக்கதை.

படத்தின் பலமே இயக்குனர் அடிப்படையில் ஒரு ஒளிப்பதிவாளர் என்பதால் படத்தின் காட்சியமைப்புகள் மிகவும் அழகாக வந்துள்ளது.

அதிலும் குறிப்பாக பள்ளிகளில் எடுக்கப்பட்ட காட்சிகள் கலர் ஃபுல்லாக இருக்கிறது.கதையின் நாயகனாக சத்யா மிக அழகாக நடித்திருக்கிறார், முந்தைய படங்களை விட இதில் நடிப்பிற்கு நிறையவே மெனக்கெட்டுள்ளார்.

படத்தின் நாயகி மியா ஜார்ஜ், அவரை போலவே நடிப்பும் அழகாக உள்ளது. தமிழ் சினிமாவிற்கு வெல்கம்+வாய்ப்புகள் குவியப்போகிறது.

இவர்கள் எல்லோரையும் விட படத்தை ஒரே ஆளாக தூக்கி செல்பவர் இசையமைப்பாளர் ஜிப்ரான் தான், தன் மெல்லிய மெலடிகளால் ஸ்கோர் செய்கிறார், மேலும் பின்னணி இசையில் கலக்கியுள்ளார்.

என்ன தான் அனைத்தும் நன்றாக இருந்தாலும் படத்தின் திரைக்கதை இழுத்து கொண்டு வருவதற்குள் போதும், போதும் என்று ஆகிவிட்டது.

இது ஒன்றே படத்தின் முழு பின்னடைவிற்கு ஒரு காரணமாக உள்ளது.சில நாட்களுக்கு முன் இந்த படத்தை பார்த்த நயன்தாரா 2 நாட்கள் கண்ணீர் விட்டு அழுததாக ஒரு செய்தி வந்து படத்தின் ஹைப்பை ஏற்றியது.

இதற்காகவே இப்படத்திற்கு காதல் ஜோடிகள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ்.ஆனால் அது முழுவதுமாக அவர்களை சென்றடைந்ததா என்றால் கேள்விக்குறி தான்.

Loading...