தாரை தப்பட்டை

தாரை தப்பட்டை
தாரை தப்பட்டை

யதார்த்தம் மற்றும் விளம்பு நிலை மனிதர்கள் வாழ்க்கையை வைத்து உணர்ச்சிகரமாக எடுக்கக்கூடிய இயக்குனர்களில் வல்லவர் இயக்குனர் பாலா. பாலாவின் படங்கள் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இம்முறை கரகாட்டக் கலையை மையமாகக் கொண்டு சசிகுமார், வரலக்ஷ்மி நடித்து இன்று வெளிவந்துள்ள படம் தான் இந்த தாரை தப்பட்டை.

கதை

இப்படத்தின் முதல் பெருமையே இசைஞானியின் 1000வது படம். படத்தின் டைட்டில் இதிலிருந்து தொடங்குகிறது தஞ்சாவூரில் கரகாட்டக் குழுவை நடத்தி வருபவர் சன்னாசி எனும் சசிகுமார், அக்குழுவில் சூறாவளி எனும் முன்னிலை கரகாட்டக்காரியாக வரலக்ஷ்மி. சசிகுமாரை தன் உயிருக்கும் மேலாக காதலிக்கிறார், அதை வெளிப்படையாக சொல்லாமலே சுற்றி வருகிறார்.

இந்நிலையில், வரலட்சுமியை 6 மாத காலமாக காதலிப்பதாகக்கூறி, அவரின் அம்மாவிடம் வந்து பெண் கேட்கிறார், கலெக்டரிடம் டிரைவராக வேலை பார்ப்பதாகக் கூறும் ஆர்.கே.சுரேஷ். தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமென நினைத்து, சசிகுமாரை விட்டுக்கொடுக்கச் சொல்லி அவரிடம் மன்றாடுகிறார் வரலட்சுமியின் அம்மா.

வேறு வழியில்லாமல் சசிகுமாரும் வரலட்சுமியை வெறுப்பதுபோல் விரட்டியடித்து, ஆர்.கே.சுரேஷை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வரலட்சுமியிடம் சத்தியமும் வாங்குகிறார். வரலட்சுமிக்கும், ஆர்.கே.சுரேஷுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு அவர்கள் இருவரையுமே எங்கு தேடியும் கிடைக்காததால், சசிகுமாரிடம் வந்து விஷயத்தை சொல்கிறார் வரலட்சுமியின் அம்மா. வரலட்சுமிக்கு என்ன ஆனது? உண்மையில் ஆர்.கே சுரேஷ் யார்? சசிகுமார் என்ன செய்தார் என்பதை தனது வழக்கமான பாணியில் சொல்லி முடித்திருக்கிறார் பாலா.

சசிகுமார்

சன்னாசி என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார் என்ற தான் சொல்ல வேண்டும் வழிக்காத தாடி, நீளமான தலைமுடி என கெட்டப்பில் தனி கவனத்தை செலுத்தியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் அனல் பறக்கும் சண்டை காட்சி தத்ருபமாக நடித்துள்ளார். இன்றைய காலத்தில் கரகாட்டக்குழுவை நடத்துவதில் எவ்வளவு சிரமம் என்பதை உணர்ச்சிகரமாக சொல்லியுள்ளார்.

வரலக்ஷ்மி

இப்படத்துக்கு பிறகு வரலக்ஷ்மியின் சினிமா வாழ்க்கை கண்டிப்பாக எகிறும் என்பதில் சந்தேகமே இல்லை. படத்தில் உண்மையான ஹீரோ வரலக்ஷ்மி தான். சசிகுமாரை வெறித்தனமாக காதல் செய்வதும், சசிகுமாருக்கு கையில் காசு இல்லாத போது பசி எடுத்தால் விஸ்வரூபம் எடுத்து நடுவிதியில் கரகாட்டம் ஆடுவதும், உனக்காக என்றால் நான் அம்மணமாக கூட நடு ரோட்டில் ஆடுவேன் போன்ற வசனங்கள் புல்லரிப்பை ஏற்படுத்துகிறது.

ஆர்.கே சுரேஷ்

பாலாவின் ஒவ்வொரு படத்திலும் வில்லன் கதாபாத்திரம் மிக வலிமை பெற்றதாக இருக்கும் அந்த வகையில் வில்லனாக அறிமுகமாகியிருக்கும் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் இந்தப்படத்தில் நல்ல ஸ்கோப் கிடைத்திருக்கிறது. அவரும் அதை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

கிளாப்ஸ்

1. முதல் பாதியில் கரகாட்டக்காரர்களின் வலியை சொல்வது

2. படத்தில் வரும் அழுத்தமான பாடல்கள் மற்றும் பின்னணியில் கிராமத்து இசையால் வசியப்படுத்துகிறார் இளையராஜா

3. சசிகுமார் மற்றும் வரலக்ஷ்மியின் இயல்பான நடிப்பு

பல்ப்ஸ்

1. படம் ஆரம்பித்து 1 மணி நேரமாகியும், இப்படம் எதை நோக்கி நகர்கிறது

2. கோரமான இரண்டாம் பாதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் பார்க்க தகுதியற்ற படம்

3. என்ன சொல்ல வருகிறார் என்பதை அழுத்தமாக சொல்லாமல், தன்னுடைய பழைய ஸ்டைல் டெம்ப்லேட்டை வைத்து கதை நகர்த்துவது

இயக்குனர் பாலா படம் என்ற நம்பி செல்வோருக்கு கண்டிப்பாக ஏமாற்றம் நிச்சயம். அவர் படத்தில் இருக்கும் இயல்பான நையாண்டி, நக்கல் இதில் காணவே காணோம்

 

Loading...