நட்பை அடித்தளமாக வைத்த பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்து இருக்கின்றன. அந்த வகையில் லேட்டஸ்ட் வரவு இந்த வன்மம்.காதல், நட்பு இந்த இரண்டு உணர்வுக்கும் ஒரு எண்டு கார்டை கிடையது ,ஆனால் இந்த உணர்வுப்போர்வமான விஷயத்தை எப்படி சொல்கிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது .அந்த வகையில் வன்மம் நட்பு ரீதியில் எந்த மாதிரி விதயாசப்படுகிறது பார்த்தால் …கொஞ்சம் ஏமற்றம் தான்

கதை

ராதா (விஜய் சேதுபதி) செல்லதுரை (கிருஷ்ணா) இருவரும் நண்பர்கள். எப்படிப்பட்ட நண்பர்கள் என்றால் வேலை வெட்டி ஏதும் பார்க்காமல் ஜாலியாக தண்ணியப் போட்டுக்கிட்டு ஊரைச் சுத்துற பார்ட்டிங்க. செல்லதுரைக்கும் அந்த ஏரியா தொழிலதிபர் ரத்னம் தங்கச்சி வதனா (சுனைனா)வுக்கும் செம லவ்வு. இது தெரிஞ்ச ரத்னம் செல்லதுரையை அடிக்கப் போகிறாரு. அப்போ நடக்கிற சண்டையில ரத்னம் கொல்லப்படுகிறார். ரத்னம் கொலைக்கு தானும் ஒரு காரணமாகி விட்டோமே என்று நினைத்து வருந்துகிற ராதா ரத்னம் குடும்பத்துக்கு சில உதவிகளின் மூலம் ஆறுதலா இருக்கிறாரு. ரத்னத்தின் எதிரி ஜெ.பி.யின் தாக்குதலில் இருந்து ரத்னத்தின் குடும்பத்தை காப்பாற்றுகிறார் ராதா. ஒருநாள் செல்லதுரை பேசுகிற பேச்சினால் மனம் உடையும் ராதா அவரது நட்பை தூக்கி எறிகிறார். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது மீதி கதை.

Vanmam-Movie-Posters-06

???????????????????????????????????????????????????

நடிகர் நடிகைகளின் பங்களிப்பு

‘ராதா’ கேரக்டரை தன்னால் முடிந்த அளவுக்கு காப்பாற்றியிருக்கிறார் மனிதர். படத்தின் ஒரே ஆறுதலும் விஜய்சேதுபதி மட்டுமே. .கிருஷ்ணா விஜய் சேதுபதியின் நண்பராக வருகிறார். ஆடல் பாடலுடன் தொடங்கும் இவர்களது காட்சிகள் இருவரின் நட்பின் இடைவெளிக்குப் பின்னர் வன்மமாய் நகருகின்றன.
சுனைனா ரொம்பவே பாவம். படம் முழுக்க அழுதுகொண்டே இருக்கிறார். ‘கோலி சோடா’ படத்தை ஒற்றை ஆளாக சமாளித்த மதுசூதனை இப்படி ஒரே வெட்டில் சாவடித்துவிட்டார்களே…? மற்ற கதாபாத்திரங்களைப் பற்றியெல்லாம் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை!

பலம்
1.விஜய் சேதுபதியின் கதாபத்திரம் வடிவமைப்பு
2. முதல் பாதியை விட இரண்டாம் பத்தி ஓகே
3. ஒளிப்பதிவு பல இடங்களில் நச்
4. தமனின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்க்கிறது.

பலவீனம்
1. பழைய திரைக்கதை வடிவமைப்பு
2. முதல் பாதி கடும் போர்
3. பாடல்கள், பின்னணி இசை, எடிட்டிங் உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள்
படத்தை இயக்கியிருக்கிறார் ஜெய் கிருஷ்ணா. இவர் குமரி மாவட்டத்துக்காரர் என்பதாலேயே இந்த பகுதியை களமாகக் கொண்டு வன்மம் படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார்.