கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாமே மாறிடுச்சு.. கடும் அப்செட்டில் சமந்தா!

திருமணத்துக்கு பின்பு முன்புபோல தனக்கு வாய்ப்புகள் வருவதில்லை என சமந்தா கூறியுள்ளார்.

கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாமே மாறிடுச்சு.. கடும் அப்செட்டில் சமந்தா!
சமந்தா

பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க.

ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும். இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விடபிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.

அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது.

அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது.

ஆனால் திருமணத்துக்கு பின்பு முன்புபோல தனக்கு வாய்ப்புகள் வருவதில்லை என சமந்தா கூறியுள்ளார். ஏன் என்னை தேடிவரும் இயக்குநர்களின் எண்ணிக்கை குறைகிறது என்றும் தனக்கு தெரியவில்லை என சமந்தா கூறியுள்ளார்.