மீண்டும் நீச்சல் உடை போட்டோவை வெளியிட்ட சமந்தா

நடிகை சமந்தா தான் நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை மீண்டும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

மீண்டும் நீச்சல் உடை போட்டோவை வெளியிட்ட சமந்தா
சமந்தா

நடிகை சமந்தா தான் நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை மீண்டும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை சமந்தா தனது கணவரும், நடிகருமான நாக சைதன்யாவுடன் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். ஓய்வு எடுக்க சென்ற இடத்தில் சமந்தா நீச்சல் உடையில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

சமந்தா முன்னதாக நீச்சல் உடையில் எடுத்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் திருமணமான பெண் இப்படி செய்யலாமா என்று அவரை விளாசினார்கள். இந்நிலையில் அவர் மீண்டும் நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

அடுத்தவர்கள் விமர்சிப்பார்கள் என்பதற்காக என்னால் உடை அணிய முடியாது. என் உடல், என் உடை என்று ஏற்கனவே தெரிவித்தார் சமந்தா. நெட்டிசன்கள் கலாய்ப்பார்கள், அறிவுரை வழங்குவார்கள் என்பதை எல்லாம் அவர் கண்டுகொள்வது இல்லை. 

முன்னதாக சமந்தா கடந்த வாரம் போச்சுக்கல் சென்றார். தனது மாமனார் நடித்து வரும் மன்மதுடு 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் அங்கு சென்றார். அந்த படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார் சமந்தா. 

மாமனார் படத்தில் நடித்து முடித்த கையோடு கணவருடன் ஸ்பெயினுக்கு கிளம்பிவிட்டார். படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் கொஞ்சம் ஓய்வு எடுக்க அவர்கள் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர். 

சமந்தா