கல்யாணம் நடக்குமான்னே தெரியல.. ஃபீல் பண்ணும் சனம் ஷெட்டி!

சமூக வலைதளங்களில் பிக்பாஸ் தர்ஷன் குறித்து, பேசி சர்ச்சையை கிளப்பிய நடிகை சனம் ஷெட்டி கொடுத்துள்ள பேட்டி வெளியாகி உள்ளது.

கல்யாணம் நடக்குமான்னே தெரியல.. ஃபீல் பண்ணும் சனம் ஷெட்டி!
சனம் ஷெட்டி

சமூக வலைதளங்களில் பிக்பாஸ் தர்ஷன் குறித்து, பேசி சர்ச்சையை கிளப்பிய நடிகை சனம் ஷெட்டி கொடுத்துள்ள பேட்டி வெளியாகி உள்ளது.

திருமண தீமில் உருவான கேலண்டர் ஷூட்டிங் நிகழ்ச்சியில், கலந்து கொண்ட நடிகை சனம் ஷெட்டி, நடிகர் சிம்பு குறித்தும், தர்ஷன் குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

திருமணம் குறித்த கேள்விக்கு தனக்கு இது போன்று திருமணம் நடக்குமா என்றே தெரியவில்லை என சனம் ஷெட்டி ரொம்பவே ஃபீல் பண்ணி பேசியுள்ளார்.

சனம் ஷெட்டிநடிகை சனம் ஷெட்டியிடம் எடுத்த எடுப்பிலேயே சிம்பு குறித்து கேட்டதும், அவரை பற்றி ஏன் கேக்குறீங்க என அதிர்ச்சியான சனம் ஷெட்டி, பின்னர், சிம்பு முன்பு போல இல்லை, இப்போ வேற மாதிரி மாறிட்டார். நல்லா வொர்க்கவுட் செய்து, அப்துல் காலிக் ரோலுக்கு ஏற்றவாறு டோட்டலாக சேஞ்ச் ஆகிட்டார் என்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னதாக தன்னை நிச்சயம் செய்துவிட்டு, தற்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என மீடியாக்கள் முன் பேசி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்த சனம் ஷெட்டி, தர்ஷன் குறித்த கேள்விக்கு, தக்க நேரத்தில் அது குறித்து தான் விரிவாக பேசுவேன் என்று எஸ்கேப் ஆகி விட்டார்.

சனம் ஷெட்டிதிருமணம் தீம் கொண்ட கேலண்டர் போட்டோஷூட்டில், ராஜ்தானி பெண்ணாக நடிகை சனம் ஷெட்டி போஸ் கொடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் விழாவில் ரிலீஸ் செய்யப்பட்டன. இந்த போட்டோஷூட்டில் திருமணத்திற்கான அனைத்து விஷயங்களும் செய்யப்பட்டன. இது போன்று நிஜ வாழ்க்கையில் தனக்கு திருமணம் நடக்குமா? என்பது தெரியவில்லை என ஃபீல் பண்ணி சனம் பேசி உள்ளார்.

தொடர்ந்து, எந்த மாதிரியான திருமணத்தை செய்து கொள்ள நீங்க ஆசைப்படுறீங்க என்ற கேள்விக்கு, பொறுமையிழந்த நடிகை சனம் தனக்கு கல்யாணமே வேண்டாம் என பொசுக்கு சொல்லிவிட்டார். மேலும், மாதவன், ஜோதிகா நடிப்பில் வெளியான டும் டும் டும் படத்தின் கல்யாண காட்சி தனக்கு பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.