செய் திரைவிமர்சனம்
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களுக்கான ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகின்றனர். அப்படி தொடர்ந்து போராடி வருபவர் தான் நகுல். அந்த வகையில் நகுல் நடிப்பில் ராஜ் பாபு இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள செய், அவருக்கான இடத்தை கொடுத்ததா? பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களுக்கான ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகின்றனர். அப்படி தொடர்ந்து போராடி வருபவர் தான் நகுல். அந்த வகையில் நகுல் நடிப்பில் ராஜ் பாபு இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள செய், அவருக்கான இடத்தை கொடுத்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு மனநல காப்பகம் தீப்பிடித்து எரிகிறது, இதற்கு அமைச்சராக இருக்கும் தலைவாசல் விஜய்யே காரணம் என்று அனைவரும் சொல்ல, அவரும் பதவி விலகுகின்றார்.
இதற்கிடையில் தான் நிரபராதி என்று நிரூபிக்க தலைவாசல் விஜய் ஆதாரங்களை தயாரிக்க, அதற்குள் அவரை ஒரு கும்பல் கொல்கிறது. அப்படியே இந்த பக்கம் நகுல் சினிமா ஸ்டாராக ஆக வேண்டும் என்று போராடி வருகிறார்.
ஹீரோயின் ஆஞ்சல் பெண் இயக்குனர், அவர் நகுலை தன் கதைக்காக பின் தொடர, ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது, ஆனால், என்ன வழக்கம் போல் நகுல் ஆஞ்சல் பேச்சை கேட்டு வேலைக்கு செல்கிறார்.
அந்த வேலையே அவர் கழுத்திற்கு கத்தியாக வந்து நிற்க, அமைச்சரை யார் கொலை செய்தார்கள், நகுல் தன் பிரச்சனைகளை எப்படி தீர்த்தார் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
நகுல் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவம் படத்தை தொடர்ந்து தேர்ந்தெடுத்த நல்ல கதை என்று சொல்லலாம், அவரும் தன்னால் முடிந்த வரை தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார், ஆட்டம், பாட்டம், பின் ஆக்ஷன் என கமர்ஷியல் ஹீரோவாகவே மாறிவிட்டார்.
இவரை தொடர்ந்து படத்தில் பெரிதும் கவர்வது பிரகாஷ்ராஜ், தலைவாசல் விஜய், நாசர் போன்ற சீனியர் நடிகர்கள் தான், சிறப்பாக தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
ஒரு நல்ல கதையை கையில் எடுத்துக்கொண்ட ராஜ் பாபு, திரைக்கதையில் தான் கொஞ்சம் தடுமாறியுள்ளார், படத்தின் காட்சிகள் விறுவிறுப்பாக செல்லும் போதே திடீரென்று ஒரு இடத்தில் பாடல்கள் வருவது பொறுமையை சோதிக்கின்றது. பின்னணி இசை, ஒளிப்பதிவு கச்சிதம், பாடல்கள் ஈர்க்கவில்லை.
க்ளாப்ஸ்
படத்தின் கதைக்களம், மனித உறுப்புக்கள் திருட்டை காட்டியவிதம்.
சீனியர் நடிகர்களின் நடிப்பு, நகுலில் துறுதுறு நடிப்பு.
பல்ப்ஸ்
தடுமாறும் திரைக்கதை, படத்தின் முதல் பாதி மிகவும் கமர்ஷியலாக காட்டப்பட்டுள்ளது.
மொத்தத்தில் நல்ல கதையில் கொஞ்சம் விறுவிறுப்பான திரைக்கதை அமைந்திருந்தால் இறங்கி செய்திருக்கும் இந்த செய்.