விஜய் சேதுபதியின் அடுத்த ஹீரோயின் இவர் தானாம்!

விஜய் சேதுபதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான சிந்துபாத் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அவரின் சில படங்கள் அண்மைகாலமாக இப்படி அமைந்துவிடுகின்றன.

விஜய் சேதுபதியின் அடுத்த ஹீரோயின் இவர் தானாம்!
விஜய் சேதுபதி

விஜய் சேதுபதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான சிந்துபாத் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அவரின் சில படங்கள் அண்மைகாலமாக இப்படி அமைந்துவிடுகின்றன.

ஆனாலும் அவர் நம்பிக்கையுடன் வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடித்து வருகிறார். தெலுங்கில் நரசிம்ம ரெட்டி, மலையாளத்தில் ஒரு படம் என நடித்துள்ளார்.

தற்போது சங்கத்தமிழன் படத்தில் நடித்து வருகிறார். இதன் பின் கடைசி விவசாயி, இலங்கை கிரிக்கெர் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் அவர் டெல்லி பிரசாத் இயக்கத்தில் துக்ளக் தர்பார் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு நேற்று வெளியானது. இதில் அவருக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்கிறாராம்.

அரசியல் பேண்டஸி படமாக இது எடுக்கப்படுகிறது.