எம்.ஜி.ஆர் டைட்டிலில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?

இயக்குநர் பாண்டிராஜ் இதை மறுத்துள்ளார். மேலும் இப்படத்துக்கு தலைப்பே இன்னும் வைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர் டைட்டிலில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?
சிவகார்த்திகேயன்

இயக்குநர் பாண்டிராஜ் இதை மறுத்துள்ளார். மேலும் இப்படத்துக்கு தலைப்பே இன்னும் வைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

வருஷத்துக்கு ஒரு படம்னு நிதானமா நடிச்சிட்டு வந்த சிவகார்த்திகேயன், இப்போ வழக்கத்துக்கு மாறா ஒரே நேரத்தில அடுத்தடுத்து பல படங்கள்ல நடிச்சிட்டு வர்றாரு.

அண்மையில ஹீரோ படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், இப்போ பாண்டிராஜ் படத்தோட படப்பிடிப்பில பங்கேற்று இருக்காரு. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

குடும்ப செண்டிமெண்டை முன்னிலைப்படுத்தி உருவாகிவரும் இப்படத்துக்கு எங்கள் வீட்டு பிள்ளை என தலைப்பு வைத்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால் இயக்குநர் பாண்டிராஜ் இதை மறுத்துள்ளார். மேலும் இப்படத்துக்கு தலைப்பே இன்னும் வைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்ல துப்பறிவாளன் படம் மூலமா அறிமுகமான அனு இமானுவேல் இந்த படத்தில சிவகார்த்திகேயன் ஜோடியா நடிக்கிறாங்க.

மேலும் கனா படத்தில சேர்ந்து நடிச்ச சிவகார்த்திகேயன் – ஐஷ்வர்யா ராஜேஷ் கூட்டணி இந்த படத்தில அண்ணன் – தங்கையா நடிக்க இருக்காங்க.

இவங்க போக யோகி பாபு, சூரின்னு ரெண்டு காமெடி நட்சத்திரங்கள் இந்த படத்தில இணைஞ்சிருக்காங்க. மேலும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.