சூர்யா நடிப்பை பார்த்து மனசுக்குள்ளேயே திட்டினேன்: பிரபல இயக்குனர்

நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவர் தற்போது இயக்குனர் கே.வி.ஆனந்தின் காப்பான் படத்தில்நடித்துள்ளார். படம் ஆகஸ்ட் மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

சூர்யா  நடிப்பை பார்த்து மனசுக்குள்ளேயே திட்டினேன்: பிரபல இயக்குனர்
சூர்யா

நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவர் தற்போது இயக்குனர் கே.வி.ஆனந்தின் காப்பான் படத்தில்நடித்துள்ளார். படம் ஆகஸ்ட் மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் கே.வி.ஆனந்த் சூர்யா நடிப்பு பற்றி ஒரு பேட்டியில்பேசியுள்ளார். காப்பான் படத்தில் ரிஸ்க் எடுத்து பல காட்சிகளில் நடித்தாராம்.

முதலில் நேருக்கு நேர் படத்தில் கேவி ஆனந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய போது சூர்யாவின் நடிப்பை பார்த்துவிட்டு மனதிற்குள்ளேயே திட்டுவாராம். அது சூர்யாவுக்கு முதல் படம். ஆனால் தற்போது 'அவரா இது?' என யோசிக்கும் அளவுக்கு தற்போது மாறிவிட்டார் எனவும் அவரது நடிப்பு திறமை பற்றி கேவி ஆனந்த் பேசியுள்ளார்.