விஷால் சமீப காலமாக தன் ரசிகர் மன்றங்களை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தி வருகின்றார். இந்நிலையில் பூஜை போட்ட அன்றே படத்தின் ரிலிஸ் தேதியை அறிவித்து, அதே நாளில் ரிலிஸ் செய்வதில் இவர் கில்லாடி.

தற்போது இவர் நடித்து வரும் பாயும் புலி படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. இதே போல் இளைய தளபதி நடிக்கும் புலி படமும் இதே நாளில் ரிலிஸ் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அப்படி ஒரே நாளில் இந்த இரண்டு படங்கள் ரிலிஸானால் பாயும் புலி வசூல் பாதிக்கும் என அவரிடம் கூறினாலும், இதிலிருந்து விஷால் ஒரு போதும் பின் வாங்க மாட்டார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.