வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் மாசு என்கிற மாசிலாமணி. இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

வெங்கட் பிரபு தன்னுடைய படத்தில் விஜய் பட வசனங்களையோ, பாடல்களையோ தன்னுடைய படத்தில் இணைப்பது வழக்கம்.

தற்போது மாஸ் படத்திலும் சூர்யாவின் அறிமுக காட்சிக்கு கத்தி படத்தின் பின்னணி இசை, துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இடம்பெற்ற மேகமாய் வந்து போகிறேன் பாடல், அழகிய தமிழ் மகன் வசனம் என பல காட்சிகள் விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தும் வண்ணம் படத்தில் இணைத்துள்ளாராம்.

அதோடு படத்தில் ஜெய்யும் சிறப்பு தோற்றத்தில் வந்துள்ளாராம்.