இளைய தளபதி விஜய் படங்கள் என்றாலே அது ரிலீசாக இருந்தாலும் சரி, படத்தின் பூஜையாக இருந்தாலும் சரி அதை ஒரு திருவிழாவாக கொண்டாடிவிடுவார்கள் விஜய் ரசிகர்கள். இந்நிலையில் இளையதளபதி விஜய் தற்போது இயக்குநர் சிம்புதேவனின் இயக்கத்தில் “புலி” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், நந்திதா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறார்கள். புலி படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டதாம் இன்னும் பாடல்கள் மட்டும் பாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

புலி படத்திற்கு பிறகு ராஜா ராணி புகழ் இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் விஜய் இணையப்போவது உலகமறிந்த விஷயம். இந்த பெயரிடப்படாத படத்தின் பூஜையைத்தான் வருகிற ஜூன் 26ம் தேதி நடத்தப்போகிறார்களாம். இதற்கு முன் ராஜா ராணி படத்தின் பூஜையை எங்கு வைத்தோமோ அதே இடத்தில் விஜய் படத்தின் பூஜையையும் வைக்க வேண்டுமென அட்லீ விருப்பம் தெரிவித்துள்ளார், இதற்கு தாணுவும் சம்மதம் தெரிவித்து பூஜைக்கான வேலைகள் நடந்து வருகிறது, இப்படத்தை தயாரிக்கப்போகும் கலைப்புலி எஸ்.தாணு எப்படியாவது சூப்பர் ஸ்டார் ரஜினியை இந்த தொடக்க விழாவுக்கு அழைத்து வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாராம். ரஜினியின் அடுத்த படத்தையும் கலைப்புலி தாணு தயாரிக்கவிருப்பதால் விஜய் பட பூஜையில் சூப்பர் ஸ்டார் கலந்து கொள்வார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது…

Loading...