இளைய தளபதி விஜய் நடிப்பில் புலி படத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தின் டீசர் நேற்று வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த டீசரில் ராஜா காலத்து கதை போல் தெரிந்தாலும், விஜய் தற்போது உள்ள ட்ரண்டிலே தான் இருக்கிறார், இதை சிலர் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு கருத்து கூறி வருகின்றனர்.

ஆனால், சில நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில் டைம் மிஷின் பற்றிய கதை தான் இது, இதன் மூலம் விஜய் கடந்த காலத்திற்கு செல்கிறார் என கூறுகின்றனர். ஒரு சிலரோ அவதார், ஜான் கார்டர் போன்ற படங்களை போல் வேறு கிரகத்திற்கு செல்கிறார் விஜய் எனவும் கூறி வருகின்றனர். மேலும், அவருக்கு சில சூப்பர் பவர் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எது உண்மையோ பொறுத்திருந்து பார்ப்போம்.