இளைய தளபதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளின் அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், சமூக வலைத்தளத்தில் போஸ்டர், வீடியோ என கலக்கி வருகின்றனர்.

இந்நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் விவேக் ‘கண்டிப்பாக புலி டீசருடன் தளபதி ரசிகர்களுக்கு விருந்து தான்’ என கூறியுள்ளார்.

தனுஷ் ‘நல்ல நண்பர் மற்றும் மனிதர் விஜய் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.

அதே போல் சிம்பு ‘என் நல்ல நண்பர் அண்ணன் விஜய் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், அவர் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இது மட்டுமின்றி சிபிராஜ், சாந்தனு போன்ற பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

Loading...