விஜய் 59வது படம் பற்றி கூறிய ஜி.வி. பிரகாஷ்

விஜய்
விஜய்

விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்திருக்கும் படம் புலி. இப்படத்தின் பஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

இப்படத்தை முடித்த கையோடு விஜய் லண்டன் சென்றிருந்தார். தற்போது விஜய் அட்லீ படத்துக்கான படப்பிடிப்பில் இறங்கியுள்ளார்.

தாணு தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று காலை சென்னை ஈ.சி.ஆர். ரோட்டில் உள்ள கேரளா ஹவுஸில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றிருக்கிறது. இந்த விழா சென்டா மேளத்துடன் தொடங்க, விஜய்யும் வேஷ்டி, சட்டையுடன் வந்து கலக்கி இருக்கிறார்.

சமந்தா, எமி ஜாக்சன் நாயகிகளாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

அதோடு ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இன்று விஜய் படம் தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading...