தனி ஒருவன் படத்திற்கு பிறகு இனி யாரும் ரீமேக் ராஜா என்று இவரை அழைக்க முடியாது. ஏனெனில் தன் சொந்த கதையில் அப்படி ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டார்.

இப்படத்தை சமீபத்தில் பார்த்த சல்மான் கான் மிகவும் பாராட்டினாராம். மேலும், இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தானே நடிப்பதாகவும், அதை நீங்களே இயக்குங்கள் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே ரமணாவை பாலிவுட்டில் இயக்கும் வாய்ப்பு ராஜாவிற்கு தான் முதலில் வந்தது, பின் சில காரணங்களால் அது தள்ளிப்போக தற்போது தனி ஒருவன் படத்தை மிக பிரமாண்டமாக பாலிவுட்டில் எடுக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகின்றது.