இளைய தளபதி விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் புலி. அதேபோல் விஷால் நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளிவந்துள்ள படம் பாயும் புலி.

ஆனால், புலி டைட்டிலுக்கு போட்டியாக தான் பாயும் புலி வைக்கப்பட்டது, இந்த இரண்டு படங்களுக்கும் ஒரே நாளில் இசை வெளியீட்டு விழா நடக்க, விஷால் வேண்டும் என்றே இப்படி செய்கிறார் என ஒரு வதந்தி பரவியது.

இதற்கு விளக்கம் தரும் வகையில் நேயர்களுக்கு பேட்டியளித்த சுசீந்திரன் கூறுகையில், ‘விஷால் தீவிர விஜய் ரசிகர், அப்படியிருக்க அவர் ஏன் போட்டிப்போட வேண்டும். மேலும், நாங்கள் இசை வெளியீட்டு விழாவை ஒரு மாதத்திற்கு முன்பே முடிவு செய்து விட்டோம், இவை எல்லாம் யதார்த்தமாகவே நடந்த விஷயங்கள்’ என்று கூறியுள்ளார்.