அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படம் 90% முடிந்தாலும் இன்று வரை தலைப்பு வைக்கவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று வெளிவரும் என கூறுப்படுகின்றது. அதற்குள் வெட்டிவிலாஸ், வரம் என பல டைட்டில் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.

அதேபோல் வாட்ஸ் அப்பில் படத்தின் டைட்டில் ‘அடங்காதவன்’ தான் என்று ஒரு வதந்தி பரவி வருகின்றது. இது வதந்தியா? இல்லை உண்மையா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.