பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் ரம்யா. இவர் அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார்.

இவர் தனது கணவர் அப்ரஜித் ஜெயராமனை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வந்திருந்தது. தற்போது இதுகுறித்து ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, எனது திருமண வாழ்க்கையை முடிக்கவுள்ளேன். இதுதான் என்னுடைய முடிவு, என்னுடைய கவனத்தை வேலையில் செலுத்த இருக்கிறேன், உங்களுடைய ஆதரவுக்கு நன்றி என கூறியுள்ளார்.

Loading...