வீரம் படத்துக்கு பிறகு அஜித், இயக்குனர் சிவா இயக்கத்தில் இரண்டாவது முறை இணைந்துள்ள படம் தல 56. இப்படத்துக்கு தற்போது வரை பெயர் சூட்டப்படவில்லை.

இந்த விஷயம் அஜித் படங்களுக்கு ஒரு வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் இந்த மாதம் இறுதிக்குள் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

அதை உறுதி செய்யும் வகையில் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் படத்தின் மொத்த வசன பகுதியும் முடிந்துவிடுமாம். மேலும் பாடல் காட்சிக்காக அடுத்த வாரம் வெளிநாடு செல்லவுள்ளது படக்குழு.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.