புலி திரைப்படம் நாளை உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இப்படத்தை காண ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படம் பாகுபலி போல் இருக்குமா? என்று சிம்புதேவனிடம் சமீபத்தில் கேட்டுள்ளனர். அதற்கு அவர் ‘இதற்கும் பாகுபலிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, இவை வேறு ஒரு கதைக்களம்.

மேலும், பாகுபலிக்கு முன்பே புலி படம் வரவேண்டியது, ஒரு கன்னியும் மூணு களவானியும் படத்திற்கு முன்னரே புலி படக் கதையை ரெடி செய்துவிட்டேன், ஆனால், விஜய்யின் தேதிகள் கிடைக்க கொஞ்சம் தாமதமானது, இல்லையெனில் பாகுபலிக்கு முன்பே இப்படம் வந்திருக்கும்’ என கூறியுள்ளார்.