அஜித் நடிப்பில் தீபாவளிக்கு வேதாளம் படத்தை அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படம் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என சிவா கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று இரவு வெளிவரும் என மதன் கார்க்கி தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இந்த டீசர் 47 நொடி ஓடும் என கூறப்படுகின்றது, மேலும், அனிருத்தின் மிரட்டல் தீம் மியுஸிக் இதில் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இத்தனை தகவல்கள் வந்தும், சமீபத்தில் வந்த தகவலின் படி டீசர் அடுத்த வாரத்திற்கு தள்ளிப்போகும் என ஒரு செய்தி உலா வருகின்றது. இந்த செய்தி அஜித் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பிறகு ஏன் அவர் அப்படி டுவிட் செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.