விஷால், நாசர், கார்த்தி என பல நடிகர்கள் இந்த முறை நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணிக்கு எதிராக களம் இறங்குகின்றனர். பாண்டவர் அணி என்று அழைக்கப்படும் இவர்கள் தமிழ் நாடு முழுவதும் நாடக நடிகர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதில் அடுத்த அதிரடியாக அக்டோபர் 2ம் தேதி ‘ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில்’ மாலை 5:30 மணியளவில் ஒரு சந்திப்பை நடத்தவுள்ளனர். இது ரஜினிகாந்தின் மண்டபம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த அணியினர் சமீபத்தில் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை ரஜினிகாந்தும் அன்றைய தினம் அந்த கூட்டத்தில் கலந்துக்கொள்வாரா? எல்லது தனது ஆதரவை அவர்களுக்கு தருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Loading...