இளைய தளபதி விஜய் நடிப்பில் நேற்று புலி திரைப்படம் உலகம் முழுவதும் ரிலிஸ் ஆகியது. இந்நிலையில் இப்படம் வெளிவருவதற்குள் விஜய் பல பிரச்சனைகளை சந்தித்து விட்டார்.

இதற்கு முக்கிய காரணம் அவருடைய வீட்டில் நடந்த வருமான வரி சோதனை தான். இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.

புலி படக்குழுவினர்கள் வீட்டில் மொத்தமாக 2 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் விஜய் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் திரையுலகத்தினரிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.