ஜூலி 2 படத்தில் நடிக்கும் போது, உடலாலும், மனதாலும் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன் என்று நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் அளித்த பேட்டியில், ஜூலி 2 படத்தில் நடிக்கும்போது உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டேன். ஜூலி 2 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இதற்காக நான் நிறைய தியாகம் செய்துவிட்டேன், நிறைய பிரச்சனைகளையும் சந்தித்துவிட்டேன்.

ஜூலி 2 படத்தால் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் வந்த பட வாய்ப்புகளை ஏற்க முடியாமல் போனது. மலையாளத்தில் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் ஒன்று மம்மூட்டி சாரின் படம். ஆனால், நான் ஒல்லியாக இருப்பதால் அந்த வாய்ப்பு கை நழுவிப் போனது.

ஜூலி 2 படத்திற்காக இரண்டு மாதத்திற்கு ஒரு முறை உடல் எடையை ஏற்றி, குறைக்க வேண்டியிருந்தது. முதலில் எடையை 11 கிலோ குறைத்தேன். அதன் பிறகு 7 கிலோ வெயிட் போட்டேன்.

உடல் எடையை ஏற்றி, குறைத்ததில் மன அழுத்தம் ஏற்பட்டது. இதனால் உடலளவிலும், மனதளவிலும் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். இதனால், படப்பிடிப்பு கூட தாமதமானது. பின்னர், என் பெற்றோர் மற்றும் நண்பர்களின் உதவியால் மன அழுத்தத்தில் இருந்து மீண்டேன் என்கிறார் ராய் லட்சுமி.