நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர்  நாகர்ஜுனாவின் மகன்  நாக சைதன்யாவை தீவிரமாக காதலித்து வருகிறார். இருவரும் ஐதராபாத்தில் தனியாக வசித்து வருகின்றனர்.

இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி நடந்தது. நிச்சயதார்த்த தினத்தன்று  திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.

இருவரும்  கமிட் ஆன படங்களை நடித்துக் கொடுத்தப்பின்பு திருமண தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

சினிமாவுக்காக இருவரும் திருமணத்தை தள்ளிப்போட்டுவிட்டு லிவ்விங் டூ கெதராக வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.

சமந்தா தற்போது தமிழில் இரும்புத்திரை, அநீதி கதைகள், விஜய் 61 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் 3 படங்களில் நடித்து வருகிறார். நாகசைதன்யா ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமந்தா வருகிற அக்டோபர் 1ம் தேதி முதல் 10ம் தேதிவரை தான் கொடுத்திருந்த தேதிகளை திரும்ப பெற்றுக் கொண்டிருக்கிறார் 10 நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பை நடத்திக் கொள்ளுமாறு கேட்டிருக்கிறார்.

இதற்கு காரணம் சமந்தா நாகசைதன்யா திருமணம் அக்டோபர் 6ம் தேதி நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.  திருமண தேதி அதிகாரப்பூர்வமாக இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது.  திருமணத்திற்கு பிறகும் இருவரும் நடிக்க முடிவு செய்துள்ளனராம்.