ரஜினி – ஷங்கர் மூன்றாவது முறையாக இணையும் எந்திரன் 2 படத்தில் புதிய தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தப் போகிறார்களாம்.

மோஷன் கேப்சரிங் மற்றும் 3 டி தொழில்நுட்பத்துடன், அனிமேட்ரானிக்ஸைப் பயன்படுத்தி இந்தப் படத்தை எடுக்கப் போகிறார்கள் என செய்தி வெளியாகியுள்ளது.

ரஜினி படங்களைப் பொருத்தவரை இவை எதுவுமே புதிதில்லை.

எந்திரன் படத்தில் அனிமேட்ரானிக்ஸ் மற்றும் மோஷன் கேப்சரிங் உத்திகள் சில காட்சிகள், குறிப்பாக க்ளைமாக்ஸ் சண்டைக்கு பயன்படுத்தப்பட்டது.

கோச்சடையான் படம் முழுக்க முழுக்க மோஷன் கேப்சரிங்கில் உருவாக்கப்பட்டது. 2 டி, 3டியில் அந்தப் படம் வெளியானது.

இப்போது இவை அனைத்து தொழில்நுட்ப உத்திகளையும் எந்திரன் 2-க்குப் பயன்படுத்தப் போகிறார்கள். ‘பார்வையாளர்களை பிரமிப்பின் உச்சிக்குக் கொண்டு செல்ல வேண்டும், இந்தியாவில் இப்படி ஒரு படம் உருவானதில்லை’ என்று சொல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ரூ 300 கோடியில் உருவாகிறது எந்திரன் 2.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடத் துவக்கத்தில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. படத்தின் வில்லனாக நடிக்க அர்னால்டு உள்ளிட்ட பல ஹாலிவுட் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதுதவிர்த்து படத்தில் இசை ஏ.ஆர்.ரஹ்மான், கலை இயக்குநராக டி.முத்துராஜ், கிராஃபிக்ஸ் காட்சிகள் ஸ்ரீனிவாஸ் மோகன், எடிட்டிங் ஆண்டனி என இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்திரன்2 படத்தை லைகா இண்டர்நேஷனல் தயாரிக்கிறார்கள்.