விஜய்யின் மெர்சல் தான் இப்போது சினிமா ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு. விஜய்யின் மூன்று வேடம், மூன்று நாயகிகள், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா என படம் முழுவதும் நிறைய பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

தற்போது இப்படம் ஜப்பானில் (Tokyo, Ebina/Kanagawa, Osaka and Nagoya) போன்ற இடங்களில் வெளியாக இருக்கிறதாம். இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் அந்த இடங்களில் வெளியானதில்லை என்பது முக்கிய செய்தி. அதுமட்டும் இல்லாமல் ஜப்பானில் வெள்ளிக்கிழமையே வெளியாக போகும் முதல் தமிழ் படமும் இதுதானாம்.

ஆனால் தற்போது அரசுடன் வரி பிரச்சனை போய்க் கொண்டிருப்பதால் கடந்த வாரத்தில் இருந்து எந்த படமும் வெளியாகவில்லை, மெர்சல் என்ன ஆகும் என்பது மட்டும் ரசிகர்களின் பெரிய கேள்வியாக இருக்கிறது.

Loading...