இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு மெர்சல் படத்தின் போஸ்டர்கள், பேனர்கள், கட்டவுட் என பல இடங்களில் காணமுடிகிறது. இந்த தீபாவளி அவரின் ரசிகர்களுக்கு மெர்சல் தீபாவளி தான்.

படத்தின் மிகவும் காத்திருக்கும் வேளையில் ஏதாவது குழு கிடைக்காதா என ஏங்குவோரும் உண்டு. படம் பற்றி சில விஷயங்களை இப்படத்தின் எடிட்டர் ரூபன் நேரலையில் பகிர்ந்துள்ளார்.

இதில் மெர்சல் படத்தின் ஃபைட் சீன்களை அனலரசு அமைத்திருக்கிறார். இந்த சண்டைகள் காட்சிகள் ஸ்டைலிஷாக இருக்கும்.மெர்சல் படம் எல்லோருக்கும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

நானும் ரசித்தேன். இனி ட்ரைலர் வரவாய்பில்லை. ஏற்கனவே டீசரை வெளியிட தாமதமாகிவிட்டது. அதுதான் காரணம். ஆனால் புரமோஷனுக்காக புரமோ வீடியொக்கள் வரும்.

படத்தில் சில காமெடி காட்சிகளை படத்தின் நேரம் கருதி நீக்கிவிட்டோம். எனக்கும் வருத்தமாக இருந்தது. கொஞ்சம் ஹுயூமர் போய்விட்டது. இதெல்லாம் படம் வெளிவந்த பிறகு டெலிட்டட் சீன்களாக வெளிவரும் என அவர் கூறினார்.

Loading...