மெர்சல் படத்திற்கான தடைகள் அனைத்தும் முற்றிலுமாக விலகி ரசிகர்களை கொண்டாட உலகம் முழுக்க பல திரையரங்குகளில் பிரம்மாண்ட ரிலீஸாக வெளியாவுள்ளது.

இப்படத்தில் முதலில் நான்கு பாடல்கள் தான் என சொல்லப்பட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன் மாயோன் என்ற புதிய பாடல் ஒன்று மேஜிக் மேன் விஜய்க்கு தீம் பாடலாக இருக்கும் என தகவல் வெளியானது.

ஆனால் இப்பாடல் உருவாவதற்கு ரஹ்மான் தான் காரணமாம். இப்படத்திற்கு இசையமைக்கும் அவர் ஒருநாள் தீடீரென தயாரிப்பாளரை அழைத்து இந்த ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்கும்.

அது வேண்டும் என கூறியதோடு பாடலை விவேக் எழுதிவிட்டார் எனக்கூறினாராம். இது பெரும் சர்ப்பிரைஸாக இருந்தது என தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.