விஜய்யின் மெர்சல் படத்திற்கு நிறைய நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதே சமயம் படத்திற்கு எதிராகவும் விமர்சனங்கள் வருகின்றன. ஆனால் உண்மையான ரசிகர்கள் படக்குழுவின் உழைப்பையும் விஜய்யின் கடின உழைப்பையும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் மெர்சல் படத்தில் எடிட்டிங் சரியாக செய்யவில்லை என கமெண்ட் செய்துள்ளார்.

இதனை பார்த்த மெர்சல் பட எடிட்டர் ரூபன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், உங்களுடைய கருத்துக்கு நன்றி, எடிட்டிங்கில் நான் இன்னும் கற்றுக் கொண்டு வருகிறேன். இனி வரும் படங்களில் அதை திருத்திக் கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.