விஜய்யின் மெர்சல் படம் ரிலீசுக்கு முன் எத்தனை முறை பிரச்சனையில் மாட்டியது என்பது நமக்கு நன்றாகவே தெரியும். படக்குழுவும் பல தடைகளை தாண்டி வெளியாகிவிட்டது. இதற்கு மேல் பிரச்சனை இருக்காது என்றால் இப்போது தான் பெரிய பிரச்சனையே.

படத்தில் இடம்பெறும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று ஒரு அரசியல் கட்சி படக்குழுவிற்கு பிரச்சனை கொடுத்து வந்தனர். அதன்படி தற்போது மெர்சல் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் 4 காட்சிகளை படத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளனர்.

தற்போது இந்த காட்சிகள் நீக்கம் குறித்து பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறோம்.