நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல். வெளியானது முதல் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் பற்றிய கலவையான விமர்சனங்கள் வந்தாலும் மத்தியில் ஆளும் கட்சியின் எதிர்ப்பால் படம் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளது.

படத்துக்கு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் ஆதரவு தந்துள்ளனர். ஏற்கனவே மெர்சல் மீண்டும் சென்சார் செய்ய அனுமதிக்கக்கூடாது என ஆதரித்த உலகநாயகன் இன்று மெர்சல் படத்தை அட்லி, விஜய் மற்றும் படக்குழுவினருடன் பார்த்துள்ளார்.

இதை அட்லீ டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.