அட்லி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகிவரும் ‘விஜய் 59′ படத்தில் இடம்பெறும் தர லோக்கல் பாடலின் வரிகள் வரும் அக்டோபர் 16-ம் தேதியன்று டிவிட்டரில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இதன் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

‘விஜய் 59′ படத்தின் டைட்டில் வெளியாகிய பிறகே இப்படத்தின் பாடல் வரிகள் வெளியிடப்படும் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது அறிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த அணியும் சேர்ந்து எடுத்த முடிவு என்றும் அவர் கூறியுள்ளார். ‘விஜய் 59′ படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்று இசையமைப்பாளர் அனிருத் பிறந்த நாள் என்பதால் அவரிம் அடுத்த படமான வேதாளம் படத்தின் பாடல் வரிகளுடன் கூடிய வீடியோக்கள் இன்று வெளியிடப்பட்டது, இதனால் கூட விஜய் படத்தின் பாடல் வரிகளை வெளியிடாமல் இருக்கலாம் என பேசிக் கொள்கிறார்கள்.