வேதாளம் படத்தின் ரகசியங்கள்..!; எக்ஸ்ளூசிவ் ரிப்போர்ட்

அஜித்
அஜித்
வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் வேதாளம் படத்தின் பாடல்கள் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்த சில ரகசியங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அவை இங்கே:

1. இப்படத்தில் ‘தல’ அஜித் கணேஷ் எனும் கதாபாத்திரத்தில் கொல்கத்தாவில் வசிக்கும் டாக்சி டிரைவராக நடித்துள்ளார். அதேசமயம் பிளாஷ்பேக் போர்ஷனில் இவர் சென்னையில் உள்ள வேதாளம் எனும் டான் கதாபாத்திரத்தில் வருவாராம்.
2. அஜித்தின் தந்தையாக நடிகர் தம்பி ராமையா பார்வையற்றவராகவும் தங்கையாக நடிகை லக்ஷ்மி மேனன், தமிழ் எனும் கதாபாத்திரத்தில் கலை கல்லூரி மாணவியாகவும் நடித்துள்ளனர்.
3. கணேஷ் அஜித்துக்கு நண்பனாக சூரியும் வேதாளம் அஜித்துக்கு நண்பனாக அப்புக்குட்டியும் நடித்துள்ளனர். இது மட்டுமல்லாமல் வித்யூலேகா ராமன் மற்றும் மங்காத்தா அஸ்வின் ஆகியோரும் இதில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
4. கணேஷ் அஜித்தின் இன்ட்ரோ பாடலாக வீர விநாயகா பாடலும் வேதாளம் அஜித்தின் இன்ட்ரோ பாடலாக ஆலுமா டோலுமா பாடலும் இடம்பெற்றுள்ளது.
Loading...