உலகம் முழுவதும் வெற்றிகரமாக விஜய்யின் மெர்சல் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. நவம்பர் 9ம் தேதி தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் அமோகமான வரவேற்பு பெற்றிருக்கிறதாம். இதனால் இன்னும் நிறைய திரையரங்குகளில் வெளியிட இருப்பதாக இப்பட தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தன்னுடைய டுவிட்டரில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இப்படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் 26 நாளில் ரூ. 12.66 கோடி வரை வசூலித்து No2 இடத்தை பிடித்துள்ளது.

படம் இன்றும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் சென்னை பாக்ஸ் ஆபிஸில் வேறொரு சாதனையை படம் செய்யும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.