தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியானதை தொடர்ந்து கடந்த வாரம் அறம், இப்படை வெல்லும், நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்கள் வெளியாகி இருந்தது. தற்போது இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது.

நயன்தாராவின் மாஸ் நடிப்பில் வெளியான அறம் படம் சென்னையில் மட்டும் ரூ. 1 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

இப்படத்தை தவிர நெஞ்சில் துணிவிருந்தால் ரூ. 34 லட்சமும், இப்படை வெல்லும் ரூ. 88 லட்சமும் வசூல் செய்துள்ளது. அதோடு சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான அவள் படம் ரூ. 1 கோடி வரை வசூலித்துள்ளது.