சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் தற்போது கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை எடுத்து வருகிறார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

சென்னையில் பேட்டியளித்த நடிகர் கார்த்தி, தீரன் ஒரு வித்தியாசமான கதை. இதில் போலிஸ் அதிகாரியாக நான் நடித்திருக்கிறேன். குற்றங்களை தடுக்க பல போலிஸ்காரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதையும் தாண்டி அவர்களின் சொந்த வாழ்க்கையை இப்படம் காட்டும். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இக்கதை அதிரடி கலந்த படமாக எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக நிதி திரட்டும் வேலைகளில் இருப்பதால் படவேலைகளை தள்ளி வைத்துள்ளேன் என அவர் கூறியுள்ளார்.