தெலுங்கு மொழித் திரைப்படம், தொலைக்காட்சி, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்த கலைஞர்களுக்கு நந்தி விருது அளிக்கப்படுகிறது. தற்போது 2014, 2015, 2016-ம் ஆண்டுகளுக்கான விருதுகளை ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

2015-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் விருதைத் தட்டிச் சென்றுள்ளது ‘பாகுபலி’ திரைப்படம். இயக்குனர் ராஜமௌலி 2014-ம் ஆண்டின் சிறந்த இயக்குனருக்கான பி.என்.ரெட்டி மாநில விருதைப் பெறுகிறார்.

2015-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான நந்தி விருதை அனுஷ்கா ஷெட்டி பெறுகிறார். ‘சைஸ் ஸீரோ’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அனுஷ்காவுக்கு விருது வழங்கப்படுகிறது.

அனுஷ்கா நந்தி விருது பெறுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே ‘அருந்ததி’ படத்தில் நடித்ததற்காக 2009-ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான ஸ்பெஷல் ஜூரி விருது பெற்றிருக்கிறார் அனுஷ்கா.

இரண்டாவது முறையாக நந்தி விருது பெறும் அனுஷ்காவை திரையுலகினரும், அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருகிறார்கள். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அனுஷ்காவுக்கு இந்த விருது அறிவிப்பு செம ட்ரீட்.