முருகதாஸின் அடுத்தப்படம் இந்த படத்தின் ரீமேக் தான், விஜய் ரசிகர்கள் அப்செட்!

விஜய்-முருகதாஸ்
விஜய்-முருகதாஸ்

முருகதாஸ் அடுத்து விஜய்யுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக பேசப்பட்டு வந்தது. அவரும் அகிரா, ஸ்பைடர் தோல்வியால் அடுத்தப்படம் ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்று காத்திருந்தார்.

ஆனால், சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக ஒரு தகவல் வந்துள்ளது, முருகதாஸ் அடுத்து அக்‌ஷய்குமார் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

இப்படம் ஹாலிவுட் படமான மில்லியன் டாலர் பேபி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என கூறப்பட்டுள்ளது, இப்படம் பாக்ஸிங்கை மையமாக கொண்டது.

இதில் அக்‌ஷய்குமார், ஹிந்தி பிக்பாஸ் புகழ் மரினா குவார் ஆகியோர் நடிக்கவுள்ளனர், பெரும்பாலும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதனால் தற்போது விஜய் படத்தை முருகதாஸ் அடுத்து இயக்குவரா? இல்லை, அக்‌ஷய் குமார் படத்திற்கு சென்றுவிடுவாரா? என விஜய் ரசிகர்களே வருத்தத்தில் உள்ளனர்.

Loading...