இந்தியாவின் முன்னணி இயக்குனர் இயக்கத்தில் துல்கர்-டாப்ஸி

துல்கர் சல்மான், டாப்ஸி, அனுராக் காஷ்யூப்
துல்கர் சல்மான், டாப்ஸி, அனுராக் காஷ்யூப்

துல்கர் சல்மான் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர். இவர் தமிழிலும் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் துல்கர் சல்மான் அடுத்து ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க டாப்ஸி ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தை இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் தரமான படங்களை மட்டும் எடுத்து வரும் அனுராக் காஷ்யூப் தான் இயக்கவுள்ளார்.

இப்படம் குறித்து சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது, மேலும் படத்தின் டெக்னிஷியன் குறித்து இன்னும் சில தினங்களில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Loading...