நடிகை அமலா பாலுக்கு சமீபத்தில் திருட்டு பயலே 2 படம் வெளியானது. இதில் அவர் பாபி சிம்ஹாவுடன் நடித்திருந்தார். இனி அடுத்ததாக அவரின் நடிப்பில் மலையாளத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வெளியாகவுள்ளது.

இதோடு அவர் மலையாளத்தில் காயம்குளம் கொச்சுன்னி படத்தில் நிவின் பாலியுடன் நடிக்க கமிட்டாகியிருந்தார். படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இவர்களின் புகைப்படம் கூட வெளியானது.

கேரளாவில் 1980 களில் நடந்த பயங்கர கொள்ளை சம்பத்தை பிரதிபலிக்கும் படியாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இதில் ஹீரோயினாக நடிக்கயிருந்த அமலா பால் படத்திலிருந்து திடீரென விலகிவிட்டராம்.

இவருக்கு பதிலாக பிரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளாராம்.அவர் விலகியதற்காக காரணம் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.

Loading...