விஜய் தன் ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். அதேபோல் அவருடைய ரசிகர்களும் ஒரு போதும் விஜய்யை எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்தது இல்லை.

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் விஜய்யை கிண்டல் செய்வதை தடுக்க வேண்டும் என அவருடைய ரசிகர்கள் காவல்த்துறையினரிடம் புகார் கொடுத்தனர்.

அதை தொடர்ந்து அந்த நபர்களின் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களை பற்றி முழுத்தகவல் இருந்தும் ஏன் போலிஸார் அந்த நபர்களை விசாரிக்க கூட இல்லை என ரசிகர்கள் கோபத்தில் உள்ளார்களாம்.